வடமாகாண ஊழலை ஆராயப்போகிறாராம் டக்ளஸ்!
by டாம்போகடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வடமாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் வடக்கு மாகாண சபை, கம்பரேலியா மற்றும், “ஐ” திட்டம் போன்றவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள விஷேட ஆணைக்குழு ஒன்று மிக விரைவில் அமைக்கப்படும் .
கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபையில் பாரிய ஊழல்மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்த்தரப்புக்களோ அல்லது வெளி நபர்களோ முன்வைக்கவில்லை. மாறாக ஆட்சியில் இருந்த அதே தரப்பில் உள்ளவர்களே அவ்வாறான குற்றச்சட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அது தொடர்பில் சில விசாரணைகள் இடம்பெற்றும் உள்ளன. அவற்றில் ஊழல் மோசடிகள் இனம் காணப்பட்டும் உள்ளன. எனினும் முழுமையான விசாரணை ஒன்று நடைபெற்று மாகாண சபையில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் அனைத்தும் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது கம்பரேலியா திட்டங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இது மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆட்சியில் இடுந்த போது நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடைபெற ஆணைக்குழு ஒன்று மிக விரைவில் நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டக்ளஸ தலைமையிலான சிரானில் நடந்த பல கோடி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடக்கி வைக்க்பபட்டுள்ளமை குறிப்பிடடத்தக்கது.