https://s3.amazonaws.com/adaderanatamil/1575867395-Kiriella-2.jpg

இருக்கும் பதவிகளை பகிர்ந்துக் கொண்டு முன்னோக்கி செல்வோம்

பாராளுமன்றம் சுமார் ஒரு மாதக்காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரிய விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அனைவரும் சமரசத்துடன் இருக்கும் பதவிகளை பகிர்ந்துக் கொண்டு கட்சியென்ற வகையில் முன்னோக்கி செல்ல எதிர்ப்பார்க்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒருமனதாக சஜித் பிரேமதாசவிற்கு நாம் வழங்கினோம்.

பாராளுமன்ற அமர்வின் போதே எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டதை அடுத்து இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் பின்னர் பிற்பகல் அளவில் சஜித் பிரேமதாக எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவார் என சபாநாயகர் எனக்கு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை எதற்காக ஒத்தி வைத்தார்கள் என்று தெரியவில்லை.

சிலர் கூறுகிறார்கள் கோப் குழுவின் அறிக்கையை மறைப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக. ஒரு மாதம் என்பது பாரிய காலமாகும்.

நாட்டில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் அது தொடர்பில் கலந்துரையாட பாராளுமன்றம் ஒன்று வேண்டும் என்றார்.