உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
by Sharath Chandarகிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் காட்டு விலங்கியல் பூங்காவில் உள்ள பபூன் வகை குரங்கு தனது உரிமையாளரின் மொபைல் போனை எடுத்து, ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த பதிவு அங்குல சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குரங்கு சேட்டைக்கு பஞ்சம் இல்லை
எல்வி மெங்மெங் என்பவர் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் காட்டு விலங்கியல் பூங்காவில் பணிபுரிந்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த பபூன் வகை குரங்கு சிறுவயதிலிருந்து வளர்க்கப்பட்டு வருகிறது. குரங்கு என்றாலே சேட்டைக்குப் பஞ்சம் இருக்காது அல்லவா? அப்படித்தான் இந்த குரங்கும், கொஞ்சம் படு சுட்டி.
மொபைல் போனில் ஆன்லைன் ஆர்டர் செய்த குரங்கு
எல்வி மெங்மெங் தான் வளர்த்து வரும் பபூன் குரங்கு முன்னிலையில் தனது மொபைல் போனில் சில பொருட்களைத் தனது ஆன்லைன் ஷாப்பிங் கார்டில் ஆட் செய்து வைத்துள்ளார். சிறிய வேலைக்காக மொபைல் போனை அங்கே விட்டுச் சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்த பொழுது அவர் போனில் பல நோட்டிபிகேஷன்கள் வந்துள்ளதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.!
ஆன்லைனில் ஆர்டர் நோட்டிபிகேஷன்
அவருடைய போனிற்கு வந்திருந்த அனைத்து நோட்டிபிகேஷன்களும் ஆன்லைனில் ஆர்டர் உறுதி செய்யப்பட்டு, அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான கன்பர்மேஷன் மெசேஜ்கள் தான். யாரோ தன்னுடைய போனை எடுத்து இந்த வேலையைச் செய்துள்ளனர் என்ற சந்தேகத்தில் எல்வி மெங்மெங் சிசிடிவி வீடியோவை சோதனை செய்துள்ளார்
சிசிடிவி வீடியோவில் சிக்கிய குரங்கு
சிசிடிவி வீடியோகளை சோதனை செய்த போது எல்வி மெங்மெங்கின் குரங்கு தான் மொபைல் போனை எடுத்து ஆன்லைன் ஆர்டர் செய்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எல்வி மெங்மெங் போனிற்கு பாஸ்வோர்ட் லாக் இல்லாததால் குரங்கு எளிதாக மொபைலை ஓபன் செய்து பயன்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
அட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே
கட்டணம் எப்படி செலுத்தப்பட்டது?
ஆன்லைன் கார்டில் முன்பு ஆட் செய்யப்பட்டிருந்த பொருட்களுடன் சில பலசரக்கு பொருட்களைக் குரங்கு ஆர்டர் செய்துள்ளது. எல்வி மெங்மெங்கின் கார்டு விபரங்கள் மற்றும் அனைத்து தகவலும் போனில் முன்பே பதியப்பட்டிருந்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த தொகை என்பதனால் சிசிவி தகவல் கேட்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரங்குகள் புத்திசாலிகள்
குரங்கு ஆர்டர் செய்த பொருட்களை எல்வி மெங்மெங் கேன்சல் செய்யவுமில்லை, ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் அவரின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. குரங்குகளுக்கு அறிவு அதிகமுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் இந்த செயலை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று எல்வி மெங்மெங் தனது வலைத்தள பக்கத்தில் சிசிடிவி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ! மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்!
குரங்கு கையில் பூ மாலை இல்லை ஸ்மார்ட்போன்
குரங்கு கையில் பூ மாலை என்ற காலம் போய் குரங்கு கையில் ஸ்மார்ட்போன் என்ற கதை ஆகிப்போனது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.
Most Read Articles
இந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.!
பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா? சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்!
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
ஸ்மார்ட்போனில் முழு கவனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்.!
அரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ
அக்கவுண்ட்களை அழிக்கப்போவதாக "ட்விட்டர்" அறிவிப்பு- எதற்கு தெரியுமா?
நார்வே-ல் விளைநிலத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட வைகிங் கப்பல்!
டெலிட் வாட்ஸ் ஆப்., இல்லனா உங்க மெசேஜ், போட்டோ எல்லாம் லீக் ஆகும்- எச்சரிக்கை விடும் நபர்?
அசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!
டிவிட்டர் தளத்தில் வந்தது புத்தம் புதிய அம்சம்.! என்ன தெரியுமா?
அடடே., வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கா: சேமிப்புக்கான சிறந்த வழி
திடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.!
Best Mobiles in India
விவோ V17
22,990
ரியல்மி X2 ப்ரோ
29,999
ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999
சாம்சங் கேலக்ஸி A70s
28,999
ஒன்பிளஸ் 7T
34,999
ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,09,894
ரியல்மி XT
15,999
ஒப்போ ரெனோ2
36,591
சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்
79,999
ஹுவாய் P30 ப்ரோ
71,990
ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999
ரெட்மி நோட் 8
9,999
ஆப்பிள்ஐபோன் 11
64,900
ஒன்பிளஸ் 7T
34,999
ரியல்மி XT
15,999
ரெட்மி K20 ப்ரோ
25,999
ஆப்பிள்ஐபோன் XR
46,669
ரெட்மி K20
19,999
சாம்சங் கேலக்ஸி M40
17,999
ரியல்மி 3 ப்ரோ
9,999
ரெட்மி K30 5G
22,160
ஹுவாய் என்ஜாய் 10
18,200
விவோ Z5i
18,270
ஹுவாய் நோவா 6 SE
22,300
ஹானர் V30
33,530
எச்டிசி டிசையர் 19s
14,030
ஷார்ப் அக்வாஸ் V
6,990
விவோ Y9s
20,340
இசெட்டிஇ பிளேட் 10 பிரைம்
12,790