திருகோணமலை மாவட்டத்தில் 58,219 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு
by Mubarak, Rebeccaதிருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு கிழமையாக பெய்த அடை மழையினால் 58,219 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
இதன்படி கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவில் 16,200 ஏக்கரும், தம்பலாகாமம் பிரதேசத்தில் 12,800 ஏக்கரும், வான்எல குரங்கு பாஞ்சன் மற்றும் பனிச்சம் குளம் பகுதியில் 19,700 ஏக்கரும், கிண்ணியாப் பகுதியில் 9,519 ஏக்கர் வயல் நிலங்களும் தொடர்ச்சியான மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் விவசாயிகளின் வயல் நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
இதேவேளை இம்மாவட்டத்தில் நேற்றும், இன்றும் மழை இன்றி தெளிவான வெயில் ஏற்பட்டுள்ளதோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்குவதற்கான தகவல்களும் அந்தந்த பிரதேச கிராம அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.