திருப்போரூர் அருகே அடகு கடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பத்தில் அடகு கடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடை உரிமையாளர் அலாரத்தை ஒலிக்கச் செய்ததால் முகமுடி அணிந்த 3 பேர் தப்பியோடியுள்ளனர். அடகு கடை கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.