http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__456417262554169.jpg

கார்த்திகை மகாதீபம் திருவிழா: மலை உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டது கொப்பரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீபம் நாளை மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதற்காக தலை சுமையாக மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு பணியாளர்கள் எடுத்துச் சென்றனர்.