http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__252971827983857.jpg

டெல்லியில் பிரதமர் மோடி - இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச சந்திப்பு : இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக இந்தியா ரூ. 2,870 கோடி கடனுதவி

டெல்லி : இலங்கை வசம் உள்ள இந்திய மீனவர்களின் அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என்று
பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பயணத்தின் முக்கிய அம்சமாக டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஜனாதிபதி மாளிகையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. அப்போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தையில்  பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.  பின்னர். டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்திப்பு மேற்கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பு


இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 'வணக்கம்' என கூறி தனது உரையை ஆரம்பித்தார் பிரதமர் மோடி.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வலிமையான பிணைப்பு உள்ளது. இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

*இலங்கை தமிழர்களுக்கு சம நீதி, சம உரிமை வழங்கும் வகையிலான 13வது அரசியலமைப்பு சட்ட திருத்த‌த்தை அமல்படுத்த வேண்டும்.((இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்)).

*இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.

*இந்தியா-இலங்கை இடையே கடல்வழி வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*பாதுகாப்பு விவகாரத்தில் ராணுவ ரீதியாகவும் இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும்.

*ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை, நீதி, மரியாதையை இலங்கை அரசு அளிக்கும் என நம்புகிறேன்.

*இலங்கைப் பொருளாதாரத்தை பலப்படுத்த இந்தியா ரூ. 2,870 கோடி கடன் வழங்கப்படும்.

*இந்திய நிதி உதவியுடன் இலங்கையில் 46,000 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.  

*இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் மேலும் 14 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்படும்

*இலங்கையில் சூரிய மின்திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 720 கோடி கடனை இந்தியா வழங்கி உள்ளது.

*இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் நிதி உதவி இந்தியா வழங்குகிறது.

*இந்தியா - இலங்கை இரண்டுக்குமே தீவிரவாதம் அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது தொடர்பாக இலங்கை அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினோம்.

*தீவிரவாதத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு ரூ.355 கோடி கடனாக இந்தியா வழங்கும்.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பேச்சு


*பிரதமர் நரேந்திர மோடியும் முக்கியமான பல பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.

*பிரதமர் மோடியுடன் இருநாட்டு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதித்தேன்.

*இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டது.

*இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயலாற்ற இலங்கை ஆர்வம் கொண்டுள்ளது. இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு என்பதுடன் நீண்ட கால நட்பு நாடும் ஆகும்.

*இலங்கையில் உள்ள தமிழர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்