காவிரிப் படுகையில் உள்ள 3 நீர்ப்பாசனங்களை புணரமைக்க ரூ. 700 கோடி தமிழக அரசு ஒதுக்கிடு : ஊழல் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என விவசாயிகள் சாடல்
சென்னை: காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள பாசன கால்வாய்களை புதுப்பிக்க தமிழக அரசு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது காலம் கடந்த செயல் என்று விவசாயிகள் விமர்சனம் செய்கின்றனர். காவிரி பாசன படுகையில் உள்ள ராஜ வாய்க்கால் நீர்ப் பாசனம், நொய்யலாறு நீர்ப்பாசனம், கட்டளை வாய்க்கால் நீர்ப்பாசனம் ஆகிய மூன்றை புதுப்பிக்கவும், புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவிரி நீர்பாசன வழித்தடங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீர்வள, நிலவளத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர் தேக்கங்களை புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவிரி படுகையில் உள்ள மூன்று நீர்ப்பாசனங்களை புணரமைக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவிரி படுகையில் உள்ள நொய்யல் ஆற்றை புதுப்பிக்க 230 கோடி ரூபாயும், ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு 184 கோடி ரூபாயும், கட்டளை உயர்மட்ட நீர்ப்பாசனத்திற்கு, 335 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பாசனங்கள் முறையாக தூர்வாரப்பட்டு புதுப்பிக்கும் பணிகளுடன் மறுகட்டமைப்பு பணிகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில் ஊழல் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று விவசாயிகள் விமர்சனம் செய்கின்றனர். தேவையான நேரத்தில் தமிழக அரசு நிதி ஒதுக்கி பணிகளை செய்யவில்லை என்பது விவசாயிகளின் குற்றச் சாட்டாகும். சரியான நேரத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஆறு மற்றும் கால்வாய்களை தமிழக அரசு புனரமைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கோடைகாலத்தில் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு இருந்தால் தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்பட்டு இருக்கும் என்பது அவர்களின் கருத்து.