விசாரணைகளை நடத்த சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் உதவியை கோரும் பிரதமர்

by

கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டு ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்த, அந்த பெண் அதிகாரியின் உதவியை பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

நீர் வழங்கல் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்வில் இன்று கலந்துக்கொள்ள சென்றிருந்த போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரியிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை. முறைப்பாடு எதுவும் செய்யப்படாத நிலைமையில் அடுத்த கட்ட விசாரணைகளை நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்க இடமளிக்க போவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.