
இணையத் தொடர்களில் நடிக்கும் சமந்தா & தமன்னா!
by எழில்பிரபல நடிகைகள் சமந்தாவும் தமன்னாவும் இணையத் தொடர்களில் நடிக்கவுள்ளார்கள். இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அமேஸான் பிரைம் விடியோவில் வெளியாகவுள்ள தி ஃபேமிலி மேன் 2 என்கிற இணையத் தொடரை ராஜ் - கிருஷ்ணா டிகே இயக்குகிறார்கள். தி ஃபேமிலி மேன் தொடர் வரவேற்பைப் பெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. எனக்குக் கனவு கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர்களுக்கு நன்றி என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சமந்தா.
தி நவம்பர் ஸ்டோரி என்கிற தமிழ் இணையத் தொடரில் நடிக்கவுள்ளார் தமன்னா. அறிமுக இயக்குநர் ராம் சுப்ரமணியன் இந்தத் தொடரை இயக்குகிறார். ஹாட்ஸ்டாரில் இத்தொடர் வெளியாகவுள்ளது. தி நவம்பர் ஸ்டோரி என்பது தந்தை - மகள் உறவைச் சொல்லும் தொடர். தந்தை வேடத்தில் ஜி.எம். குமார் நடிக்கவுள்ளார்.
.jpg)