மட்டக்களப்பில் பல பகுதிகள் நீரில் மூழ்கின

by

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள படுவான்கரை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து மேற்கொள்ளவும் தடையேற்பட்டுள்ளது.

அந்தவகையில், வெல்லாவெளி - மண்டூர் பிரதான வீதியூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அம்பாறை மாவட்டத்திற்கு செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பல வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன், வயல் நிலங்களும் வெள்ள நீர் நிரம்பியுள்ளதன் காரணமாக பெரியளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/battica_flood001/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/battica_flood002/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/battica_flood003/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/battica_flood004/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/battica_flood005/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/battica_flood006/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/battica_flood007/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg