முக்கிய வழக்குகளின் விசாரணையை வீடியோ, ஆடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
சென்னை: 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்க கூடிய முக்கிய வழக்கு விசாரணையை வீடியோ, ஆடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் கட்டாயம் ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.