http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__676067531108857.jpg

ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி, ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொறியாளர்களும், பட்டதாரிகளும் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் கட்டாயம் என்பது வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சக்கட்டம் என்று  அவர் கூறியுள்ளார். கோவை மாநகராட்சியில் துப்புரவு வேலைக்கு பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக செய்து வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதை இச்செய்தி எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இளைஞர்கள் எதிர்காலத்தை அதிமுக ஆட்சி பாழ்படுத்தி வருகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வருவதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால்40000 ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.