டிசம்பர் 1, 2ம் தேதிகளில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும்: சென்னை வானிலை மையம்
சென்னை: டிசம்பர் 1, 2ம் தேதிகளில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று லேசான மழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.