ரூ.199 மற்றும் ரூ.351 என இரண்டு குறைந்த கட்டண பிளானை வெளியிட்ட ஜியோ ஃபைபர்

by
https://www.gadgetstamilan.com/wp-content/uploads/2018/07/JIO-Giga-Fiber.jpg

ஜியோ நிறுனத்தின் உயர் வேக பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் பயனாளர்களுக்கு ரூ.199 வாராந்திர பிளான் மற்றும் மாதந்திர ரூ.351 பிளானும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.199 பிளானில் 7 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வழங்குகின்றது.

முன்பாக ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ. 699 முதல் ரூ. 8.499 வரை வழக்கமான ஜியோ திட்டங்களைப் போலவே நன்மைகளையும் வழங்குகிறது. தற்போது வந்துள்ள இரு பிளான்களும் ஜிஎஸ்டி வரி சேர்க்கப்படாமல் உள்ளது.

முதல் பிளானாக வெளியிடப்பட்டுள்ள வாரந்திர  FTTX Weekly Plan ரூ.199 கட்டணத்தில் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ. 234.82 ஆகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் வரம்பற்ற டேட்டா 100 mbps வேகத்தில் கிடைக்கப்பெறும்.

அடுத்ததாக வந்துள்ள மாதந்திர பிளான் ரூ.351 கட்டணத்தில் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ. 414.18 ஆகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 50 ஜிபி டேட்டா 10 mbps வேகத்தில் கிடைக்கப்பெறும். வரம்பை கடந்த பின்னர் 1 Mbps வேகத்தில் டேட்டா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிங்க – ஜியோ ஃபைபர் பிளான் விபரம்