விரைவில்.., விவோ V17 குவாட் கேமராவுடன் விற்பனைக்கு அறிமுகமாகிறது

by
https://www.gadgetstamilan.com/wp-content/uploads/2019/11/vivo-v17-india-launch-december.jpg

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் பஞ்ச் ஹோல் டிசைன் பெற்ற செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 (Vivo V17) பிரைமரி ஆப்ஷனில் நான்கு கேமராக்களை கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

சமீபத்தில் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையில் கொண்டு வரப்பட உள்ள வி17 மொபைல் போனில் 6.38 அங்குல முழு எச்டி + 19.5: 9 விகிதம் கொண்டதாக 2340 x 1080 பிக்சலுடன் 90% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் குறைந்தபட்ச பெசலை பெற்று சூப்பர் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மாடலில்  8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் மூலம் செயல்படுகின்ற வி17 போனில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி முதன்மை கேமரா சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சாரையும் பெற்றுள்ளது. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபீ படங்களுக்கு 24 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

https://www.gadgetstamilan.com/wp-content/uploads/2019/11/Vivo-V17.png

கைரேகை சென்சார் ஆதரவுடன் இணைப்பு விருப்பங்களாக டூயல் சிம், டூயல்-பேண்ட் வை-ஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆகியவற்றுடன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மூலம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

மேலும் படிங்க – விவோ யூ20 ஸ்மார்ட்போன் சிறப்புகள்