https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/29/original/iraq_protest.jpg

இராக் போராட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 45 பேர் மரணம்

by

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இராக் தெற்குப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டங்களைக் கலைக்க பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதில் 45 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 233 பேர் படுகாயமடைந்தனர். 47 போலீஸாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த போராட்டங்களின் காரணமாக தற்போது வரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராக்கின் மனித உரிமைகளுக்கான சுயாதீன உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!