https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/29/original/Yasuhiro_Nakasone.jpg

ஜப்பானின் மூத்த முன்னாள் பிரதமர் 101 வயதில் காலமானார்!

by

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யஷுஹிரோ நகசோனே, டோக்கியோவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் வெள்ளிக்கிழமை காலை காலமானார், அவருக்கு வயது 101.

நகசோனே, 1982 முதல் 1987 வரை ஜப்பான் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பணியாற்றினார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடனான நெருங்கிய நட்புக்கு நகசோனே மிகவும் பிரபலமானவர். இவர்களது நட்பு "ரான்-யசு" நட்பு என்று பிரபலமாக அழைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜப்பானின் மிக மூத்த முன்னாள் பிரதமராகவும், உலகின் மிகவும் மூத்த முன்னாள் அரசியல் தலைவராகவும் யஷுஹிரோ நகசோனே (101) இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!