
கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மிக விரைவில் நிறைவு செய்து பயணிகளுக்கு உடனடியாக சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நேற்று (28) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய பயணிகள் முனையத்தின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று பிற்பகல் அங்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு தாமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.