http://img.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_2019_837093532085419.jpg

சங்கரர் சுட்டும் சாஸ்தா

சாஸ்தா, அஞ்ஞானத்தின் உருவான அசுரசக்திக்கும் ஞான வடிவான இறைசக்திக்கும் நடக்கும் போராட்டத்தில் ஞானம் அடையும் வெற்றியை தன் லீலையால் உணர்த்துகிறான். அத்வைத சத்தியத்தை நிலைநாட்டத் தோன்றிய சர்வேசனின் அவதாரமான ஆதிசங்கரர். இந்த உண்மையை நன்குணர்ந்து, நமது சனாதன மதத்தினை ஆறு பிரிவுகளாக சைவ - வைஷ்ணவ - சாக்த - கௌமார - காணாபத்ய -  சௌர மதங்களாக வகுத்தார். ஓங்காரத்தின் வடிவே விநாயகன் ! அதை உணர்த்தும் ஞானத்தின் உருவே வேலவன் !

தன்மயான உலகினை தன்னின்றும் தோற்றுத்து மீண்டும் தன்னிடத்திலேயே லயப்படுத்தும் சின்மயப் பொருளே சிவம் ! இந்த இரண்டுக்கும் இடையில் இயங்கிடும் உலகைக் காப்பது விஷ்ணு ! அகிலம் இயங்கிட ஆதாரமாக விளங்கிடும் ஆதிசக்தி ! இந்த கோட்பாடுகளிலும் நிலைபெறுபவன் ஐயன். சைவத்தில்  சிவ புத்திரன்  வைணவத்தில் ஹரி நந்தனன். சாக்தத்தில் அம்பாசுதன். கௌமார காணபத்யத்தில் குஹ கணேச சோதரன். சௌரத்திலோ அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்.

சு.இளம் கலைமாறன்