அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி-சேலை வழங்கும் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்
சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுகிறது. 2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரு.2,363 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்டமாக 5 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 முதல்வர் பழனிசாமி வழங்கினார். பரிசுத் தொகுப்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் 1 கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை, கரும்புத்துண்டு வழங்கப்படுகிறது. விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இ ஆட்டோ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சென்னையில் 100 எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
பெட்ரோல், டீசலில் ஓடக்கூடிய ஆட்டோவை மின்சார ஆட்டோவாக மற்றி வடிவமைத்துள்ளன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வன சரகர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் இந்த இ-ஆட்டோக்கள் தயாரிக்கப்பட்டது.