https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/29/original/Shinzo_Abe_with_PM_Modi.jpg

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் மாதம் இந்தியா வருகை!

by

இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜப்பான் பிரதமரின் இந்தியா வருகை டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வருகை தரும் ஜப்பான் பிரதமர் அபே, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தங்க உள்ளார். இதன்மூலம் இம்பாலில் தங்கும் முதல் ஜப்பான் பிரதமர் எனும் சிறப்பை பெறவுள்ளார். ஏனெனில் இம்பால், 2-ஆம் உலகப் போரின் போது, ஜப்பானுக்கும் எதிரி நாட்டு கூட்டுப் படைகளுக்குமான போர்க்களமாக இருந்துள்ளது. 

இம்பாலில் நடைபெற்ற போரின் 75-ஆவது ஆண்டு தினத்தை குறிக்கும் விதமாக கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தையும் பார்வையிடுவார், அங்கு அமைதிக்காக நினைவஞ்சலி செலுத்துகிறார். 

இருப்பினும் இந்திய அரசு தரப்பில் இருந்து ஜப்பான் பிரதமர் வருகை, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தும் இடம் தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!