https://s3.amazonaws.com/adaderanatamil/1575002091-Court-2.jpg

ரோயல் பார்க் மனு இன்று விசாரணைக்கு

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதியாக காணப்பட்ட ஒருவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்படுவார் என எதிர்பார்ப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை விடுவிக்க அதிகாரம் இருந்தாலும் சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் அதைப் பயன்படுத்த முடியாது என மனுதாரர்கள் கூறியுள்ளனர்.