https://s3.amazonaws.com/adaderanatamil/1575002578-train-accident-2.jpg

வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு

வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (29) காலை முதல் உரிய அட்டவணையின் படி ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை கொழும்பில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டதாகவும் அந்த ரயில் சேதமடைந்த பகுதியை கடக்கும் போது சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய முடியும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

யாழில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி வந்த யாழ் தேவி கடுகதி ரயில் கல்கமுவ மற்றும் அமன்பொல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் தடம்புரண்டது.

இதனால் இந்த ரயில் கடவையின் ஊடாக இடம்பெற்ற சகல ரயில் சேவைகளும் தடைப்பட்டன.

குறிப்பாக ஐந்து ரயில் தண்டவாளங்கள் தடம்புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து செல்லும் ரயில்கள் மஹவ ரயில் நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த ரயில்கள் அம்பம்பொல ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.